பெரும் சோகம்..! மின்சார ரயிலில் அடிபட்டு பெண்ணின் கால் துண்டானது..!
பொதுமக்கள் பேருந்து போன்ற போக்குவரத்தைவிட ரயில் பயணத்தையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மக்கள் பெரிதாக நம்புவது மின்சார ரயில் சேவை தான். ஒரு நாள் மின்சார ரயில் சேவை நிறுத்தம் ஏற்பட்டால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுவர்.
பல ரயில் நிலையங்களில் பல ரயில் நிலையங்களில் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்வதும் நாம் பார்த்திருப்போம்.பல ரயில் நிலையங்களில் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்வதை நாம் பார்த்திருப்போம். அப்படி ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ஒரு கோர சம்பவம் சென்னை சைதாப்பேட்டையில் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் நேற்று சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு பெண்ணின் கால் துண்டானது. கவனிக்காமல் சென்றபோது தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் மோதி வலது கால் பாதத்தின் மேல் பகுதி துண்டானது. மேலும் தலையில் அடிபட்டு சுயநினைவின்றி உயிருடன் இருந்த பெண் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.