ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் புதிய முன்னெடுப்பு வெளியீடு..!
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் புதிய முன்னெடுப்பான RMRL Illustrated Series நூல் வரிசையின் முதல் வெளியீடாக, “Understanding the script of Indus Valley Civilization” (ஆசிரியர்: சுந்தர் கணேசன்) நேற்று முன்தினம் (அக்டோபர் 2) வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி சிறப்புரையாற்றினார். சிந்துவெளி நாகரிகத்தின் வரலாற்றுப் பெருமையையும், தமிழ் ஆய்வுகளின் பங்களிப்பையும் வலியுறுத்திய அவர், “இளைய தலைமுறைக்கு இத்தகைய ஆய்வுகள் பெரும் ஊக்கமாக இருக்கும். பழமையான நாகரிக மரபுகள் நமக்குள் புதிய ஆர்வத்தையும், படைப்பாற்றலையும் தூண்டுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
நூலை தமிழ்நாடு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது வெளியிட்டார்.
சிந்துவெளி ஆர்வலர்கள், வாசகர்கள், நூலக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.