Asia Cup Trophy Controversy: ஆசியக் கோப்பை விவகாரம்! பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டாரா நக்வி? வெளியான தகவல்!
கடந்த 2025 செப்டம்பர் 28ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை (Asia Cup 2025) இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்பிறகு, சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது. இதையடுத்து, மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi)
ALSO READ: வென்ற அணிக்கே ஆசியக் கோப்பை.. ஏசிசி கூட்டத்தில் பிசிசிஐ கடும் வாதம்..!
மொஹ்சின் நக்வி வெளியிட்ட அறிக்கை:After BCCI strong posture and threat, PCB and ACC Chief Mohsin Naqvi RETURNS Asia Cup trophy just before flying back to Lahore.
‘The trophy has been handed over to the UAE Board’ pic.twitter.com/uEYw5xjzx4
— Megh Updates 🚨™ (@MeghUpdates)
இது தொடர்பாக மொஹ்சின் நக்வி தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவில், “இந்திய ஊடகங்கள் வெளியிடுவது உண்மைகள் அல்ல. பொய்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்கவில்லை, ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்தப் பொய்யான வதந்திகள் வெறும் பிரச்சாரம், இதன் நோக்கம் நமது சொந்த மக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமே” என்றார்.
மேலும், அந்த பதிவில், “துரதிர்ஷ்டவசமாக, இந்தியா கிரிக்கெட்டில் தொடர்ந்து அரசியலைக் கொண்டு வருகிறது. இது விளையாட்டின் உணர்வைப் புண்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக, அன்று நான் கோப்பையை வழங்கத் தயாராக இருந்தேன். இப்போதும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அவர்கள் கோப்பையை வாங்க விரும்பினால், ACC அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து அதைப் பெற அவர்கள் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள்” என்று எழுதினார்.
ALSO READ: இந்திய மண்ணில் நாளை முதல்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?
முன்னதாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கோப்பை விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் தன்னை அவமதித்ததாக நக்வி குற்றம் சாட்டியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி ராஜீவ் சுக்லா, ஆசிய கோப்பை கோப்பை ஏ.சி.சி.யின் சொத்து என்றும் அதில் யாருக்கும் தனிப்பட்ட உரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.