ரகசியமாக நடந்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது தெரியுமா?

Hero Image
Newspoint

கடந்த சில ஆண்டுகளாக விஜய் தேவரகொண்டாவும் (Vijay Devarakonda) ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.  இருப்பினும், அவர்கள் தங்கள் காதல் உறவைப் பற்றி ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக எங்கும் அறிவிக்கவில்லை. ஆனால் அவர்களின் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் விஜய்-ராஷ்மிகாவின் டேட்டிங்கை பலமுறை உறுதிப்படுத்தியுள்ளன. வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், விடுமுறைகள்.. அவர்கள் எங்கு சென்றாலும், விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடியாகச் சென்றனர். இருப்பினும், காதல் ஜோடி தனித்தனி புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மறைமுகமாக தங்கள் காதல் கதையை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்ப்பு திரைப்பட ரசிகர்களிடம் இருந்தது.

ரகசியமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம்

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பரவிய வதந்தி தற்போது நிஜமாகப் போகிறது. விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.  இருவருக்கும் அக்டோபர் 3, 2025 வெள்ளிக்கிழமை காலை விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் வைத்து ரகசியமாக இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருணத்தை உறுதிப்படுத்தினர்.

இதையும் படிக்க : இட்லி கடைக்கு கிடைக்கும் வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

திருமணம் எப்போது தெரியுமா?

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா -ரஷ்மிகாவின் திருமணம் அடுத்த 2026 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. பல பிரபலங்களைப் போலவே, அவர்கள் ஒரு டெஸ்டினேஷன் திருமணத்தையும் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் முதன்முறையாக கீதா கோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன் பிறகு, அவர்களுக்கு இடையே நல்ல உறவு உருவாகியுள்ளது. இதன் பிறகு, இருவரும் இணைந்து டியர் காம்ரேட் படத்திலும் ஜோடியாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் அவர்களின் காதலுக்கு நல்ல அடித்தளமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தேசிய விருது தயாரிப்பாளருடன் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் தகவல்!

இதற்கிடையில், விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் ஏற்கனவே பான் இந்தியா நட்சத்திரங்களாக ரசிகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றுள்ளனர். விஜய் சமீபத்தில் கிங்டம் படத்தின் மூலம் மற்றொரு வெற்றியைப் பெற்றார். மறுபுறம், ராஷ்மிகா தென்னிந்திய படங்களுடன் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக கீதா கோவிந்தம் படம் பலரின் விருப்பமான படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டாலும் இதுவரை இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் இருவருக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.