TJS George: புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டிஜேஎஸ் ஜார்ஜ் காலமானார்
புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டி.ஜே.எஸ் ஜார்ஜ் (97) உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார்.
1928ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் டி.ஜே.எஸ். ஜார்ஜ்.
இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற இவர் 1950 ஆம் ஆண்டு அப்போதைய பாம்பேயில் 'Free Press Journal'-ல் பத்திரிகையாளராகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.
'The New Indian Express' பத்திரிகையின் தலையங்க கட்டுரையாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
மேலும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் 1300 கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.
'Asian Age', 'Searchlight' போன்ற பத்திரிகைகளிலும் இவர் பணியாற்றி இருக்கிறார்.
ஆங்கிலத்தில் நிறையப் புத்தகங்களை எழுதி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இலக்கியம் மற்றும் கல்விக்கு இவர் ஆற்றிய தொண்டுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
நையாண்டித் தனமும் கிண்டலும் நிறைந்த எழுத்துகளுக்குப் பெயர் பெற்ற ஜார்ஜ் 93 வயது வரை பத்திரிகைத்துறையில் பணியாற்றி இருக்கிறார்.
கேரளத்தில் பிறந்திருந்தாலும், தன்னுடைய பெரும்பாலான காலத்தை பெங்களூருவில் கழித்திருக்கிறார்.
1965 ஆம் ஆண்டு சர்ச்லைட் பத்திரிகையில் பணியாற்றியபோது அப்போதைய பிகார் முதல்வர் கேபி ஷாகேவுக்கு எதிராக கட்டுரை வெளியிட்டு, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் குறிப்பிடத்தக்கது.
கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" - கடுகடுத்த அண்ணாமலை