Change sunsign
மேஷம்

October, 2025

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றம்: 08.10.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10.10.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17.10.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27.10.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து செவ்வாய், புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இந்த மாதம் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நிதானமாக இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். அஸ்வினி: இந்த மாதம் மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பரணி: இந்த மாதம் பணப் பிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும். நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும். சந்திராஷ்டம தினங்கள்: அக் 24, 25, 26 அதிர்ஷ்ட தினங்கள்: அக் 06, 07