Change sunsign
கும்பம்

October, 2025

கிரகநிலை: ராசியில் சனி (வ), ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றம்: 08.10.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10.10.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17.10.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27.10.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய், புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இந்த மாதம் காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். சதயம்: இந்த மாதம் கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பூரட்டாதி 1, 2, 3 பாதம்: இந்த மாதம் எந்தஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும். சந்திராஷ்டம தினங்கள்: அக் 19, 20, 21 அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோ 02, 03, 29, 30