October, 2025
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
08.10.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10.10.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.10.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27.10.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து செவ்வாய், புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
ரேவதி:
இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்களை தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: அக் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 04, 05, 31