Change sunsign
ரிஷபம்

October, 2025

கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றம்: 08.10.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 10.10.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17.10.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27.10.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய், புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கலாம். அரசியல் துறையினருக்கு காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். கார்த்திகை 2, 3, 4 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். ரோகிணி: இந்த மாதம் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். மிருக சிரீஷம் 1, 2, பாதம்: இந்த மாதம் உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம் பண பற்றாக்குறை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். சந்திராஷ்டம தினங்கள்: அக்டோ 01, 27, 28 அதிர்ஷ்ட தினங்கள்: அக் 08, 09