October, 2025
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
08.10.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக ராசிக்கு மாறுகிறார்.
10.10.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.10.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27.10.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய், புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும்.
பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.
ஆயில்யம்:
இந்த மாதம் காரியங்களில்தடை, தாமதம் உண்டாகலாம். வீண்அலைச்சல் ஏற்படும். தொழில் போட்டிகள் குறையும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: அக் 04, 05, 31
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 13, 14