Change sunsign
சிம்மம்

29-05 October, 2025

இந்த வாரம் திடீர் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். சுபச் செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் அனைத்தையும் தகர்ப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிரத்தையாக பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். எதிலும் சந்தோஷம் நிம்மதி வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை நீங்கும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். பரிகாரம்: சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்யவும். மனதிலிருக்கும் குறைகள் நீங்கும்.