October, 2025
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
08.10.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10.10.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.10.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சூரியன் ராசிக்கு மாறுகிறார்.
27.10.2025 அன்று ராசியில் இருந்து செவ்வாய், புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும்.
சுவாதி:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: அக் 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 19, 20, 21