October, 2025
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
08.10.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10.10.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.10.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27.10.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து செவ்வாய், புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் இழுபறியாக இருந்த ஒரு காரியங்கள் வேகம் எடுக்கும். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள்.
மூலம்:
இந்த மாதம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும்.
பூராடம்:
இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: அக் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 24, 25, 26